Aswins Home Special Family Festival: Provides Education Scholarship to Worker’s Children Founder KRV. Ganesan

பெரம்பலூரில் நடைப்பெற்ற அஸ்வின்ஸ் நிறுவன குடும்ப விழாவில் அதன் தலைவர் கே.ஆர்.வி.கணேசன் பணியாளர்களின் குழந்தைகள் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் திருச்சி, சென்னை, ஆத்தூர் (சேலம்), நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றது. ஆண்டுதோறும் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாகவும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காகவும் “அஸ்வின்ஸ் குடும்ப விழா” நடத்தப்படுகிறது.

வழக்கம் போல், இந்தாண்டிற்கான அஸ்வின்ஸ் குடும்ப விழா பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை கல்பாடி பிரிவு சாலையில் உள்ள அஸ்வின்ஸ் தலைமை அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கே.ஆர்.வி. கணேசன் தலைமை வகித்தார்.

நிர்வாக இயக்குனர்கள் ஆர்.வரதராஜ், ஜி.செல்வக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை உற்சாகப் படுத்தி மகிழ்விக்கும் வகையில், சின்னத்திரை பிரபலங்களின் மேஜிக், மிமிக்கிரி, ஜக்லின் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

பணியாளர்களின் குழந்தைகள் தாங்கள் பள்ளிகளில் நடைப்பெற்ற பல்வேறுப் போட்டிகளில் பெற்ற பரிசுகளை,அஸ்வின்ஸ் குழுமத்தலைவரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

இதனையடுத்து அஸ்வின்ஸ் குழுமத்தலைவர் கே.ஆர்.வி. கணேசன், பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கி நல்ல முறையில் கல்வி பயில ஊக்கப்படுத்தினார். இவ்வாறு 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பேசிய அவர்,

அஸ்வின்ஸ் குழுமத்தில் தானும் ஓர் பணியாளர் என்று சொல்லிக் கொள்வதையே பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பணியாளர்களுக்கு எந்த வகையிலும் தாம் உதவி செய்வேன் என்றும், வருடந்தோறும் குடும்ப விழா நடத்தி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கல்வி ஒன்றே சிறந்த செல்வம் என்பதை குறிப்பிட்ட அவர், குழந்தைகள் சீறிய முறையில் கல்வி பயின்று எதிர்கால லட்சயத்தினை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து பணியாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக அஸ்வின்ஸ் குழுமத் தலைவரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் பெரம்பலூர், திருச்சி,சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அஸ்வின்ஸ் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் வேலைவாய்ப்பு அலுவலர் கிரிஜா, மற்றும் பகவதி, சரவணன்,சூரி என்ற வெங்கடேசன், அசோக், சசி, கலைமணி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!