At Perambalur bus stand, women are suffering due to drug addicts, request to the collector to remove the Tasmac store!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், விதிமுறைகளுக்கு மாறாக டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், வெளியூர் செல்லும் ஆண் பயணிகள் குடித்துவிட்டு, போதையில் ஊருக்கு செல்ல முடியாமல் அரை மற்றும் முழு நிர்வாணமாக படுத்து கிடக்கின்றனர். மேலும், பெண் பயணிகளை அருவருப்பான தகாத வார்த்தைகளால் திட்டுவதும், போதையில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை உடலுறவிற்கு அழைப்பதால், பெண் பயணிகள், போதை ஆசாமிகள் இடையே வாக்குவாதம், மோதல், தகராறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் இருக்கும் மதுக்கடையை அகற்றி பெண்கள் சுதந்திரமாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் வெங்கடபிரியா-விற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.