At Perambalur bus station, a citizen slapped a woman on the back! Women fear due to lack of security!!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் திருச்சி மற்றும் சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் இளம்பெண் ஒருவர் வந்து நின்றுள்ளார்.
அப்போது, அப்பகுதிக்கு வந்த போதையில் வந்த போக்கிரி ஒருவன் இளம் பெண்ணின் புறத்தில் தட்டியதோடு, தலையில் கைவைத்தும் சீண்டல்களை செய்தான். இதை எதிர்ப்பாக்காத அப்பெண் அவனிடம் காலணியை கழட்டி கொண்டு தகராறு செய்தார். அங்கிருந்த பயணிகள் அவனை தட்டி கேட்ட போது, நான் யார் தெரியுமா? என அங்கிருந்த அனைவரையும் மிரட்டி தாக்க முயன்றான். பின்னர், அப்பகுதியில் இருந்த பயணிகள் ஒன்று திரண்டு தாக்க முயன்ற போது தப்பி ஓடினான்.
பெரம்பலூர் மாவட்ட போலீசார் ஒவ்வொரு பேருந்திலும், பாதுகாப்பு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசாரை நியமித்து, சாதாரண உடையிலும் பேருந்து நிலையத்திற்குள் இரவு – பகலாக வலம் வர செய்ய வேண்டும். இல்லை என்றால், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
பெண்களே அதிகாரிகளாக வலம் வரும் பெரம்பலூரில் தனியாக வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.