At Perambalur, College Sale of Self Help Group Manufactured Products – Exhibition; Collector visited.

பெரம்பலூர் சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம் மற்றும் சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டார்.

மகளிர் சுயமாக உழைத்து முன்னேறும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பிப்பதற்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்கி பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களான குளியல் சோப்புகள், ஜூட் பேக், நவதானிய உணவு வகைகள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்ற விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்த கண்காட்சி இன்று (29.08.2023) முதல் தொடங்கி 31.08.2023 அன்று வரை 3 நாட்களுக்கு தொடர்நது நடைபெறவுள்ளது. ராமகிருஷ்ணா மற்றும் சாரதா கல்வி நிறுவனங்களின் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் ஆர்வமுடன் கண்காட்சியினை கண்டுகளித்து பொருட்களை உரிய விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட அலுவலர் அருணாச்சலம், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், சந்தை பொருட்கள் விற்பனை மேலாளர் சங்கர், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!