At Siruvachur near Perambalur, Madura Kaliamman Temple Kudamukukku ceremony! Thousands of devotees participated.!!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் திருக்கோயில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் சுமார் 3 கோடி மதிப்பில் கோவில் சீரமைக்கப்பட்டது. அதன் குடமுழுக்கு விழா இன்று காலை நடந்தது. கடந்த மார்ச்.27ம் தேதி தொடங்கி யாகங்கள் நடந்தது. அதன் கும்பாபிஷேகம் இன்று காலை அதன் குடமுழுக்கு விழா நடந்தது. அதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சேலம், நாமக்கல், சென்னை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பபட்டிருந்த கோவில் திருப்பணிக்குழு ஏற்பாட்டில் பணிகள் செய்யப்பட்டது, மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும், பக்தர்களும் அன்னதானம் வழங்கினார். போலீசார் பலத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.