At the 15th camp, 12,116 people were vaccinated against corona: Collector Venkatapriya!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை அன்று ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசின் உத்தரவின்படி நடத்தப்பட்டு வருகிறது. இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்று, 15 வது கட்டமாக 190 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக மாவட்டத்தில் மொத்தம் 12,116 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.