at the MP, MLA, in the presence of persons with disabilities in the public authorities of the camp on the charge near in perambalur
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து விதமான பரிசோதனை மற்றும் பல்வேறு கருவிகள் வழங்க இன்று முகாம் நடைபெற்றது. முகாமில், சிதம்பரம் தொகுதி எம்.பி., சந்திரகாசி, குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள், மருத்துவம், ஊரக வளர்ச்சித்துறை வருவாய் மற்றும் சமூக நலத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது எம்.பி மற்றும் எம்.எல்.ஏவிடம் உதவித் தொகை மற்றும் அடையாள அட்டை வழங்குதலில் உள்ள தாமதம் உள்ளிட்ட குறைகளை தெரிவித்தனர்.
இதைக் கேட்ட எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரன் துறை அதிகாரிகளை அரசு விதிமுறைகள் படி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை அலைக்கழிக்காமல் வழங்க வலியுறுத்தினர். மேலும், முகாம் முறையற்று அமைக்கப்பட்டிருந்ததால் அதை சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ மாற்றுத்திறனாளிகள் அலைவதை தவிர்க்கும் வகையில் முகாமின் முகப்பிலேய உதவி மையம் அமைக்க வேண்டும், அதோடு ஒலிபெருக்கி ஒன்றையும் ஏற்பாடு செய்யக் கூறினார்.
மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு அறையாக அலைவதை தவிர்க்க தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் உரிய பிரிவுக்கு செல்ல ஏற்பாடு செய்யவும் கூறினார். மேலும், அரசு ஒதுக்கிய நிதி போதவில்லை தன்னை அனுகும் படியும் அதற்கான உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.
மேலும், பல்வேறு குறைகளை தெரிவித்த பொதுமக்களுக்கு எம்.பி சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் அவர்களது விண்ணப்பற்களிலேயே சிபாரிசு கையெழுத்திட்டு ஆங்கேயே வழங்கினார். மேலும், கூட்டத்தில் ஒலி பெருக்கி வாயிலாக மாற்றுத்திறனாளிகள் துறையில் உள்ள நலத்திட்ட உதவிகளை அப்போதே தெரிவித்தால் கிராம மக்கள் அலைய மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உடனடியாக ஏற்பாடு செய்து அறிவிப்பதாக உறுதி அளித்தனர்.