At today’s plea to tampering robbers: breaking Readymade dress shop robbery

பெரம்பலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள், வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பெரம்பலூரில் நேற்று பகலில்தான் கொள்ளையர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டில் 5பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நிலையில் நேற்றிரவு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் ரொக்கம் ரூ.48 ஆயிரம் மற்றும் டி.சர்ட்டுகளை கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ. லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

இது குறித்து கடையின் உரிமையாளர் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு கொள்ளையர்களை தீவிரமாக அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கொள்ளை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வருவதால் பொதுமக்கள் வணிகர்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவல் துறையினர் கூடுதலாக காவலர்களை பணிக்கு நியமனம் செய்து கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!