Athletics and team sports competitions for people with disabilities : Perambalur Collector V. Santha Information

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட பிரிவு 2019-2020-ம் ஆண்டிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இருபாலாருக்கும் வரும் ஜன.31 அன்று பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

கை, கால் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 1 .50 மீ ஓட்டம்- கால் ஊனமுற்றோர், 100 மீ ஓட்டம் – கை ஊனமுற்றோர், 50 மீ ஓட்டம் – குள்ளமானோர், குண்டு எறிதல் – கால் ஊனமுற்றோர், 100 மீ சக்கர நாற்காலி – இருகால்களும் ஊனமுற்றோர் பார்வையற்றோர் பிhpவில் 50 மீ ஓட்டம் -முற்றிலும் பார்வையற்றோர், 100 மீ ஓட்டம் – மிககுறைந்த பார்வையற்றோர், நின்ற நிலை தாண்டுதல் – மிககுறைந்த பார்வையற்றோர், குண்டு எறிதல் -முற்றிலும் பார்வையற்றோர் மென் பந்து -மிகக்குறைந்த பார்வையற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டவர் பிரிவில் 50 மீ ஓட்டம் -புத்தி சுவாதினம் முற்றிலும் இருக்காது, 100 மீ ஓட்டம் – புத்தி சுவாதினம் நல்ல நிலையில் இருக்கும் மென்பந்து எறிதல் – புத்தி சுவாதினம் முற்றிலும் இருக்காது, நின்ற நிலையில் தாண்டுதல்-மூளை நரம்பு பாதிப்பு மென்பந்து எறிதல் – புத்திவாதினம் நல்ல நிலையில் இருக்கும். காது கேளாதோர் பிரிவில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

கை,கால் ஊனமுற்றோர் பிரிவில் இறகுப்பந்து (ஒற்றையர், இரட்டையர்) -குழவிற்கு 5 நபர்கள், மேஜைப்பந்து -குழுவிற்கு 2 நபர்கள் ஆகிய விளையாட்டுகளும் பார்வையற்றோர்கள் பிரிவில் கையுந்துபந்து (அடாப்டட் வாலிபால்) -ஓரு குழுவிற்கு -7 நபர்கள் விளையாட்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் எறிபந்து -ஒரு குழுவிற்கு -7 நபர்கள் விளையாட்டும், காது கோளாதோர் பிரிவில் கபடி -ஒரு குழுவிற்கு 7 நபர்கள் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற உள்ளது

இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அடையாள அட்டையை அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.

மேற்காணும், இந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் மாநில போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது தொடர்பான விவரம் அவர்களுக்கு பின்னர் தொpவிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!