Attempt to enter the infantry child near the Namakkal: officials action

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட வயது 7 சிறுமியை பரிசோதித்த மன நல மருத்தவர் குணமணி அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை வீட்டில் துன்புறுத்துவதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியிடம் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா மீட்புக்குழுவினருடன், வீசானம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அச்சிறுமி சித்தி மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டு அக்குழந்தை மீட்கப்பட்டது.

குழந்தைக்கு முகம் ,உடல் முழுக்க உள்ள காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வழிகாட்டுதலின்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலமாக பெண் குழந்தைக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் மற்றும் துன்பறுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!