Attempt to kill a Youth on a Perambalur mid Road
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இன்று புல்லட்டில் சென்று கொண்டிருந்த வாலிபரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. அவ்வழியாக வந்த மக்கள் சிதறி ஓடினர். இந்நிலையில் காவல் நிலையம் ஒரு சில 100 மீட்டர்களுக்குள் இருந்தால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெட்டு பட்டவரை மீட்டனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பாதிக்கபட்ட நபர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் சிலோன் காலனி பகுியை சேர்ந்த சூனி கண்ணன் ( ), என்பதும், இவர் மீது ஏற்கனவே, காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை மற்றும் அடி தடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சூனி கண்ணனை மருத்துவனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் மூலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை முயற்சிக்கு காரணம், முன்விரோதமா, அல்லது தொழில் போட்டியா என்ற கோணத்தில் விசாரனையை முடுக்கி விட்டுள்ளனர். மாலை நேரத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.