Attempted burglary in 3 shops in Perambalur: Rs. 750 worth of cigarette packets stolen!
பெரம்பலூர் நகரத்திற்கு உட்படட்ட வடக்கு மாதவி சாலையில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடை, மற்றும் சலூன் கடை, மினரல் வாட்டர் சப்ளை செய்யும் ஏஜன்சி ஆகிய 3 கடைகளில் நேற்றிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
ஆனால் அங்கு பணம், நகை என எதுவும் கிடைக்கவில்லை. மளிகைகடையில் மட்டும் ரூ.750 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் எடுத்து சென்று உள்ளனர். இன்று காலையில் இந்த சம்பவம் தெரியவந்தது. தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடனும், அப்பகுதியில் உள்ளள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.