Auction for vehicles seized in liquor cases in Perambalur district: Police notice!

மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெ.ஆரோக்கியபிரகாசம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 18 எண்ணிக்கை கொண்ட இரண்டு சக்கர வாகனங்கள், 01 இரண்டு சக்கர மின்வாகனம் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் மொத்தம் 20 வாகனங்களை வரும் மார்ச். 7ம் தேதி காலை 10.00 மணிக்கு தண்ணீர் பந்தலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் எஸ்.பி மணி மற்றும் எனது முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்;ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 94981 59048, 63810 75811 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 5,000-ம் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 10,000 ம் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை 06.03.2022 முதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூரில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும், பெறப்பட்ட வைப்புத்தொகை கழித்துக்கொள்ளப்படும். வாகனங்களை 06.03.2022ம் தேதி காலை 10.00 மணிமுதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!