Auction of quarries at Perambalur Collector’s office: DMK Minister PA led hard attack by preventing BJP from bidding: Auction canceled

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கல்குவாரி தொழில் கொடிக் கட்டி பறக்கிறது. 1 போட்டால் 10 ஆக திரும்ப வரும் பிசினஸ். அதிகாரிகள் ஒத்துழைத்தால், 30 தாக கிடைக்கும். தோண்டுவது கல் அல்ல காசு.

இந்த தொழில் ஆளும் கட்சியாக வருபவர்களே அதிகளவு டெண்டர் எடுப்பார்கள். அதிகாரிகள் ஒத்துழைக்கும் போது அளவுக்குமீறி தோண்டி எடுத்து செல்வது வழக்கம். இதை ஜனநாயக நாட்டில் யாருக்கும் கேட்க உரிமையில்லை. பல சிறு கட்சிகள் வரைவில்லை. அவர்களை பேசி கட்டிங் கொடுத்து சரிகட்டி விட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், கல்பாடி வடக்கு, செங்குணம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம் மற்றும் பாடாலூர் கிழக்கு ஆகிய கிராமங்களில் 31 இடங்களில் கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலத்திற்க்கான விண்ணப்பம் வழங்கும் பணி இன்று காலை துவங்கி மாலை 5 மணி அளவில் முடிவடைகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குவாரிக்கும் அரசு நிர்ணயத்ததை விட அதிக அளவில் ஏலம் கேட்பவர்கள் மறைமுகமாக ஏலத்திற்க்கான விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் போடுகின்றனர். இதனைதொடர்ந்து நாளை டென்டர்கள் பிரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருந்தன.

இந்நிலையில், இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு அரியலூர் மற்றும் குன்னம், ஒகளூர், பெண்ணகோனம், முருங்கங்குடி, எழுமூர், உள்ளிட்ட பல கிராமங்களில் இளைஞர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உதவியாளர் மகேந்திரன் என்பவர் அழைத்து வந்திருந்து முகாமிட்டு இருந்தார். அப்போது போலீசார் இன்று கலெக்டர் அலுவலகத்திற்குள் கலவரம் நடக்கும் என முன்கூட்டியே கணித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இன்று திங்கள் கிழமை என்பதால் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

திமுகவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் குழுக்களாக பிரிந்து, போன் செய்தால் உள்ளே பேட்ச் பேட்ச்சாக வர திட்டமிட்டு இருந்தனர். அதன்படி உள்ளேயும் பலர் போலீசுக்கு போக்கு காட்டி உள்ளே நுழைந்தனர். இதில் டி.எஸ்.பி பழனிசாமி பணியில் இருக்கும் போதே அமைச்சர் உதவியாளர் மகேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகத்தில் துண்டை கட்டிய வண்ணம் நுழைந்தனர்.

சுமார் 12. 30 – 1 மணி அளவில் பாஜகவை சேர்ந்த தொழில்துறை பிரிவு மாவட்டத் துனை தலைவரும் கவுல்பாளையம் ஊராட்சி தலைவருமான கலைச்செல்வன் மற்றும் வக்கீல் முருகேசன் ஆகியோர் கல்குவாரிக்கான டெண்டரை பெட்டியில் போடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது திமுகவினர் அவர்களை வழிமறித்து டென்டரை போட விடாமல் தடுத்தனர். மேலும் அவர்களிடம் பேசி போடவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இதையும் மீறி அவர்கள் துணை இயக்குனர் சுரங்கத்துறை அலுவலகத்தில் புகுந்து டெண்டரை போட முற்பட்டபோது அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து அமைச்சர் உதவியாளர் மகேந்திரன் கடுமையாக தாக்கினர். திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு சுரங்கத்துறை அலுவலகத்தை சூறையாடினர். மேலும் இதனை தடுத்த துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகியோரையும் தாக்கினர். இதனை தடுத்த காவல்துறையினரையும் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார் இதனால் அந்த அலுவலக வளாகம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத நிலை ஏற்பட்டதோடு, கலெக்டர் அடிதடி நடந்தது. அதோடு ஒரே கூச்சல் குழப்பத்தை கண்டு பொதுமக்கள் அலுவலர்கள், பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் சம்பவ இடத்திற்கு உடனே வந்து டெண்டர் போட வந்தவர்களை தவிர அனைவரும் வெளியேறுங்கள் என்று எச்சரித்த பின்னரும் அங்கிருந்தவர்கள் கலைந்து செல்லாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த திமுகவினர் அனைவரையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி வெளியேற்றினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் நடைபெற இருந்த 31 கல்குவாரிக்கான ஏலத்தினை ரத்து செய்வதாக அறிவித்தார்.

பின்னர் களேபரம் செய்த அனைவருக்கும் திமுகவினர் சார்பில் மரத்தடியில் பிரியாணி வழங்கப்பட்டது. போலீசார் வீடியோ எடுத்ததால், முகத்தை மூடியபடியே காருக்குள் சென்றனர். பெரம்பலூர் திமுவினருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக அரியலூரில் இருந்து ஆட்களை இறக்கி அமைச்சர் உதவியாளர் மகேந்திரன் கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டார்.

போலீசார் இன்னும் திறமையுடன் செயல்பட்டு கலெக்டர் அலுவலகத்தின் முக்கிய வாசல் தவிர அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில், முக்கிய வாசல் வழியாக வெளியேறிய அனைவரையும் பிடித்து கவனித்து இருந்தால் கலெக்டர் அலுவகத்தில் பிரியாணி சாப்பிட்டு இருக்க முடியாது. பல போலீசார் திமுகவினரிடம் அடிவாங்கியதை வெளியில் சொல்லமல் சென்றனர். மேலும், செல்போனில் படம் எடுத்த செய்தியாளர்களை சிலர் தாக்கினர், சிலர் செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து சென்றனர். போலீசார் தலையீடடால் செல்போன்களை திரும்ப கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

கடந்த ஆட்சியில் குவாரி ஏல விவகாரத்தை பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் கட்சிதமாக வெளியே தெரியாத வகையில் சத்தமில்லாமல் பேசி டீல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!