Auction of seized vehicles in Perambalur district crime cases: Police informed!
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 15 இரு சக்கர வாகனங்கள் 09.10.2023 அன்று காலை 10.00 மணி முதல் ஆயுதப்படை வளாகம் தண்ணீர் பந்தலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7904136038 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 5,000 மதிப்பு தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை ஆதார் அட்டை நகலோடு 07.10.2023 முதல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் ஏலத் தொகையுடன் சரக்கு வரி, சேவை வரி மற்றும் GST சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாகனங்களை 08.10.2023 அன்று காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.