Audi Coconut Shooter on Fire, Festival in Perambalur on the first day of the Aadi month
ஆடிமாதத்தில் பல்வேறு திருவிழாக்கள் தமிழகத்தில் நடைபெறும். அம்மன் கோவில்களில் விசேசங்கள் அதிகமாக இருக்கும்.
தமிழகத்தின் சேலம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, பவானி, எடப்பாடி, நாமக்கல், குமரபாளையம், திருச்செங்கோடு, கரூர், ஈரோடு, கொடுமுடி, சத்தியமங்கலம், அந்தியூர், மேட்டுபாளையம், திருப்பூர், பல்லடம், காங்கேயம், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஆடி முதல்நாளை முன்னிட்டு, முற்றிய தேங்காயின் கண்களைத் திறந்து அதிலுள்ள நீரை அகற்றிய பின்னர் பொட்டுக் கடலை, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் இந்த தேங்காயை சொருகி தீயில் வாட்டி, சுட்டு பின் சாப்பிடுவார்கள், தேங்காயை உரித்து சுத்தம் செய்து மஞ்சள் தடவி, துளையிட்டு, அதில் உள்ள தேங்காய்நீரை எடுத்ததும், ஊறவைத்த பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பொட்டுக்கடலை, எள், வறுத்த பாசிப்பருப்பு போன்றவற்றை அரைத்து அதனைத் தேங்காயில் போட்டு சுடுவதும் உண்டு. இதை பிரசாதமாக தங்களின் வீட்டிற்கு எடுத்தும் செல்வர். தேங்காய் சுடும் விழா வீட்டுக்கு வீடு வெகுசிரப்பாக செய்து மகிழ்வர். இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர், இரட்டைமலை சந்து, எசனை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூலாம்பாடி, வேப்படி – பாலக்காடு, வெட்டுவால்மேடு, கவுண்டர்பாளையம், பனம்பட்டி, கோரையாறு, அய்யர்பாளையம். பூஞ்சோலை, விஜயபுரம், ஆகிய ஊர்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் வெகுசிறப்பாக கொண்டாடி மகிழந்தனர்.
தெய்வீகப் பண்டிகைகள் துவங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன் கொடுக்கும் மாதமாகும்.
ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆகியவை ஆடி மாதத்தில் முக்கிய விழாக்களாகும்.
“ஆடிச் செவ்வாய் தேடிக்குளி!” ‘ஆடிப் பட்டம் தேடி விதை’, “ஆடியில் காற்றடித் தால் ஐப்பசியில் மழை வரும்’, “ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, “ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி’, “ஆடிக் கூழ் அமிர்தமாகும்.’என்பதெல்லாம் முன்னோர்கள் தெரிவிக்கும் பழமொழி. ஆடிப் பிறப்பு : “ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி’
ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதி களுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை- பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரை யில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக் குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்று கின்றனர். இதனால் “ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி’ என்பார்கள்.