Auto-Omni bus collision near Perambalur accident: One man and Two cattle killed
பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு சாலை பகுதியில் இன்று மதியம் திட்டக்குடியிலிருந்து வி.களத்தூர் நோக்கி 5 பசு மாடுகளை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது, அப்போது மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஆம்னி பஸ் (பர்வின் டிராவல்ஸ்) லோடு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லோடு ஆட்டோ தூக்கி வீசப்பட்டு, அதிலிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான இரண்டு பசு மாடுகள் பலியானது. மூன்று மாடுகள் தப்பியோடியது.
மேலும், இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் வந்த கிளீனர் வெள்ளப்பாண்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் சேகர் உட்பட இருவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.