Auytha pooja in Perambalur on behalf of Anna Trade Union Auto Workers Union!
பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள அண்ணா தொழிற்சங்க (3+1) ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அதில், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். அப்போது மாவட்ட செயலாளர் ஆர்.டிராமச்சந்திரன் தொழிலாளர்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வருங்காலத்தில் தொழிலாளர்களாக பணிபுரியும் அனைவரும் முதலாளிகளாகவும், ஆட்டோ உரிமையாளர்கள் பெரும் வாகன முதலாளிகளாக வளர வாழ்த்தினார். மேலும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு, ஒரு பிரச்சனை என்றால் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், எப்போதும் தோளோடு தோள் நின்று பாதுகாப்பு அரணாக விளங்கும் என்றும், அதிமுக கட்சி நிகழ்ச்சி அறிவிப்புகள் அனைத்தும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பகிரப்படும் என தெரிவித்தார். அப்போது, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழச்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. முன்னதாக ஆட்டோகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் பூஜை நடத்தப்பட்டது.