Award to social workers and charities who have served for the development of women; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2023ம் ஆண்டிற்காக வழங்கப்படும், சுதந்திர தின விழா விருது பெற, பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள், தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்க பதக்கம் (ம) சான்றும், சிறந்த நிறுவனத்திற்கு ரூ.50,000 ரொக்க பரிசுடன், 10 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் (ம) சான்று வழங்கப்படுகின்றன.

இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 10.06.2023 மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவரத்தை, பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!