Award to the farmers of Perambalur district for excellence in traditional vegetable cultivation!
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், முறையான மண்வள மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான வரைவோலை வழங்கப்படும். மேலும், தகவலுக்கு தொடர்புடைய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.