Awards for Life Saving Humanitarian Actions: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக வழங்கப்படும் (Jeevan Raksha Padak Series Of Award 2023) விருதுகளுக்காக ஒரு பக்க குறிப்புரையுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30.06.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04328 -225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பக் தெரிவித்துள்ளார்.