Awareness Benevolent Benefit of Unborn, Abandoned Children: The Collector opened up.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டறிந்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகையினை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைத்தார்.
“ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டறிந்தால் அக்குழந்தைகளை சைல்டு லைன், காவல்துறை, சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம், குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகிய அமைப்புகளை தொடர்பு கொண்டு குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இளைஞர் நீதிச்(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக எவரிடமும் ஒப்படைக்கக்கூடாது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தத்துக்கொடுத்தல் மற்றும் தத்தெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் சட்ட ரீதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை கண்டறிந்தால் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் மத்திய தத்தெடுத்தல் வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம், புதிய பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
அப்போது அரசாங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.