Awareness Camp for Handling Energy in Small and Medium Enterprises

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிசக்தியினை திறன்பட கையாளுவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் மற்றும் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை பயிற்சி முகாமும் நடைபெறவுள்ளது.

மேலும், எரிசக்தியினை சிக்கனமாக கையாளுவதற்காக இப்பயிற்சியில் 10 நபர்கள் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் ,Petroleum Conservation and Research Association, Small Industries Development Bank of India, National Productivity Counsil ,Bureau of Energy Efficiency மற்றும் The Energy Resources Instituteபோன்ற நிறுவனங்கள் எரிசக்தி மேம்பாட்டு நிறுவன பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில், தொழிலாளர்கள் முதல் நிறுவனத்தலைவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியானது மாவட்ட தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கங்கள் இணைந்து நடத்தவுள்ளது.

உற்பத்தி சார்ந்த தொழில் செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எரிசக்தி தணிக்கையினை Bureau of Energy Efficiency மூலம் அங்கீகரிக்கப்பட்ட எரிசக்தி தணிக்கையாளர்களை கொண்டு தங்கள் நிறுவனங்களில் தணிக்கையினை மேற்கொள்ளலாம். இத்தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களின் 50 சதவீத தணிக்கை செலவினை, அரசு மானியமாக வழங்கிடும். இது அதிகபட்சமாக ரூ.75ஆயிரம் வரை வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எரிசக்தி தணிக்கை நடைமுறைப்படுத்தலாம். எரிசக்தி தணிக்கையில் அறிவுறுத்தியபடி, பழைய இயந்திரங்களை புதுப்பித்தல், அல்லது மாற்றுதல் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கடைபிடிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயந்திர தளவாடங்களை புதுப்பித்தலுக்காக 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை வழங்கப்படும். சேவை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் மூலம் மேற்படி சலுகையினை பெற்ற உற்பத்தி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் (தொலைபேசி எண்.04328-291595) என்ற தொலைபேசி எண்ணினை தொடர்புகொள்ளலாம். மேலும் இத்திட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோர்கள் பயனடையலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!