Awareness Camp on Dengue is taking place in all schools – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழக அரசு வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு (ஏடிஸ்) கொசு ஒழிப்பு தினம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆட்சியர் தலைமையில் இம்மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வருகின்ற 05.10.2017 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டெங்கு பற்றிய விழிப்புணர்வுகள் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியாகள் மூலம் வழங்கப்படவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்குநோயை தடுக்கும் பொருட்டு வட்டாரத்திற்கு 20 களப்பணியாளர்களும், பேரூராட்சிகளில் தலா 10 களப்பணியாளர்களும், நகராட்சியில் 40 களப்பணியாளர்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசுப்புழுக்களை அழித்துவருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும்.

வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொது மக்கள் காய்ச்சல் என்றால் கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வீடு தேடிவரும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளா;களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், 3 தாலுக்கா மருத்துவமனைகளிலும் மற்றும் 30 படுக்கை கொண்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் (லப்பைக்குடிக்காடு, அம்மாபாளையம், பூலாம்பாடி) 24 மணி நேரமும் காய்ச்சல் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைப்பேசி எண்கள்:

பெரம்பலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் 9443807011, ஆலத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கலியமூர்த்தி 9442926800,

வேப்பந்தட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் 9894766770, வேப்பூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் 9994567121,

மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன் 9443517431, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்தன் 8903877848 என்ற எண்களில் தொடர்புகொண்டு டெங்கு பற்றிய ஆலோசனைகளை பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!