Awareness mini marathon competition in Perambalur urging the public to vote 100 percent!

வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கடபிரியா பாலக்கரையில் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்
.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களித்திடவும், நமக்கான தலைவரை நாமே தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக கடமையினை வாக்களிப்பதன் மூலம் நிறைவேற்றிடும் பொருட்டும், நியாயமாகவும் நேர்மையாகவும் எவ்வித அச்சுறுத்திலின்றியும் வாக்களிப்பு செய்திட வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, இப்போட்டியில், தங்களது உடைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயக கடமை ஆற்றுவோம், எனது ஓட்டு எனது உரிமை போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி பெரம்பலூர், பாலக்கரையிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டு காமராஜர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை வழியாக சென்று வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!