Awareness of open space Toilet : Student “malyuttappataikal” groups form
தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மாற்றிடும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு துவக்கபள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம் மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான மல்யுத்தப்படைகள் அமைத்தல் தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கலந்து கொண்டு பேசியதாவது:
தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் சார்பில் நடைபெறும் இரண்டு நாள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் துய்மையான குடிநீர், சுகாதாரம், சுத்தம் மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு எதிரான விழிப்புணர்வுகளை மாணவ, மாணவிகளுக்கு ஏற்ப்படுத்திட வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு எதிராக பள்ளிகள் தோறும் மாணவ, மாணவிகளைக் கொண்டு குழுக்கள் உருவாக்க வேண்டும். “மல்யுத்தப்படைகள்” என்ற பெயரில் இக்குழுக்கள் இயங்கும்.
இப்படைகள் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதன் மூலம் ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவ, மாணவிகளின் மூலமாக கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.
மேலும், தூய்மையின் அவசியம் குறித்து ஒவ்வொரு மாணவரும் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகள் தோறும் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச்செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களை துய்மையாகப் பராமரிப்பதன் அவசியம் குறித்தும், கழிவறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆசிரியர;கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும், என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தங்கள் பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்த உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அரசாங்க பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.