Awareness program in Perambalur on the occasion of Suicide Prevention Day!
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சூப்பர் 30 முன்னாள் தலைமை ஆசிரியர் நா. ஜெயராமன் தலைமையில் நடந்தது. தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்து டாக்டர் புவனேஸ்வரி தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பெஸ்ட் டிரஸ்ட் மற்றும் புவனேஸ்வரி தேவராஜன் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.