Awareness program was conducted near Namakkal on the celebration of Deepavali
நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,இந்திய மருத்துவ சங்கம் மற்றும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவனமாய் தீபாவளி கொண்டாடுவோம் கண்களை காப்போம் பட்டாசு வெடிக்கும் போது கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையாசிரியர் சி.வடிவழகன் தலைமை வகித்தார்கள்.
எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலர் மோகனசந்திரன் முன்னிலை வகித்தார்கள்.
விழிப்புணர்வு நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் மருத்துவர் ரங்கநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டாசு வெடிக்கும் போது கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசியதாவது
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி திருநாள் கொண்டாடி வந்தாலும் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தீக்காயம் ஏற்பட்டு பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
தீக்காயம் அடைவர்களில் பெரும்பாலும் 8 வயது முதல் 16 வயதுடைய குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தீ விபத்தில் நாற்பது சதவீதம் கண்ணில் தீக் காயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பட்டாசுகளை எளிதில் தீ பிடிக்கும் இடங்களான சமையல் அறை மற்றும் பூஜை அறையில் வைக்க கூடாது.
பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் பெற்றோரின் உதவியுடன் வெடிக்க வேண்டும் பட்டாசுக்கும் நமக்கும் ஒரு கை நீளம் இடைவெளி இருக்க வேண்டும் .
நமக்கு அருகில் ஒரு முழு பக்கெட் தண்ணீர் வைத்து வெடிக்கும் போது விபத்து ஏற்ப்பட்டால் தீயை அனைத்து விடலாம். ராக்கெட் போன்ற வானத்தில் சென்று வெடிக்கும் பட்டாசு வெடிகளை கண்ணாடி பாட்டில் அல்லது தகர பாட்டிலில் வைத்து வெடிக்க கூடாது,
ராக்கெட் மற்றும் அணுகுண்டு போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருவதை தவிர்க்கவும்.
பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு கண்ணாடி அதாவது பாலிகார்பனேடாலான (POLYCARBONATE) உடையாத கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
வெடிக்காத பட்டாசுகளை தொடக்கூடாது.
மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்க கூடாது.அவற்றை தண்ணீர் ஊற்றி நனைத்து விடவேண்டும். சாலைகள் ,தெருக்கள் மற்றும் குடியிருப்பு நிறைத்த பகுதிகளை தவிர்த்து திறந்த வெளியில் வெடிப்பது நன்று.
பட்டாசு வெடித்து கண்ணில் அடிபட்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன? உடனடியாக கண் மற்றும் உடலில் உள்ள அணைத்து தீக்காய பகுதிகளையும் உடனடியாக சுத்தமான குடிக்கும் தண்ணீரால் நன்றாக கழுவி விட்டு,தாமதமில்லாமல் அருகில் உள்ள மருத்துவமனை அவசர பிரிவிற்கு சென்று கண் மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டும்.
இதனால் கண் மற்றும் உடல் பகுதிகளில் வெப்பம் மற்றும் வேதிப்பொருள் பாதிப்பு (THERMAL AND CHEMICAL INJURY)
குறைக்க படுகிறது.
கண்ணை தேக்க கூடாது. கண்ணை அழுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் ஊற்றகூடாது.
மருத்துவரை அணுகாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி ஊற்றி விட்டு,கிருமி பாதிப்பு அதிகமான நிலையில் வரும் போது சிகிச்சை பலனின்றி பார்வையிழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகள் ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவை அணுகலாம்.
அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவர்கள் பட்டாசை தொட்டு விட்டு கண்ணை தேய்க்கும் போது அதில் உள்ள வெடி மருந்து கண்ணில் பட்டு கண் உறுத்தல் ஏற்படும்.அப்படி உறுத்தல் ஏற்பட்டால் சுத்தமான குடிக்கும் தண்ணீரால் கழுவலாம்.இதை தவிர்க்க பட்டாசு வெடித்து முடித்தவுடன் குழந்தைகளை கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.
மேலும் மத்தாப்பு ,சங்கு சக்கரம் போன்ற புகை வரக்கூடிய பட்டாசில் இருந்து வரும் புகை கண்களை பாதிக்கும். அப்படி பாட்டாசு வெடிக்கும் போது கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.
தீபாவளி திருநாளை கொண்டாடி பாதுகாப்பாக விபத்து ஏற்படாமல் முன்னேச்சரிகையாக கொண்டாடி நம்மையும் நம் குடும்பத்தையும் காப்போம். பார்வையிழப்பை தடுப்போம்.
இவ்விழாவில் ஆசிரியர் இரா. சுப்ரமணியன், மற்றும் பிற ஆசிரியர் /ஆசிரியைகள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் நாசர்,சங்கரநாராயணன், முத்துசாமி,ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்