Awareness rally against gender based violence; Collector started.
பெரம்பலூரில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்குபெற்ற தேசிய அளவிலான பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
150க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்ட, பேரணியானது பாலக்கரை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கி ரோவர் ஆர்ச் வரை சென்று முடிவுற்றது.
பேரணி தொடங்குவதற்கு முன்னதாக ”ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம், பெண்கள் விரும்பும் உயர் கல்வி கற்பதை ஊக்குவிப்போம், அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம், பெண்களின் பெயரில் சொத்துக்களை பதிவு செய்வதை ஊக்குவிப்போம், அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை அனுமதியோம், அனைத்து செயல்பாடுகளிலும் பெண்கள் சமமாக முடிவெடுப்பதை உறுதி செய்வோம் என்ற பாலின சமத்துவ உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதில், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, உள்ளிட்ட அரசு பணியார்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: