Awareness rally and book fair on behalf of the Golden Gates School, Perambalur

பெரம்பலூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கோல்டன் கேட்ஸ் பள்ளி தாளாளர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:

பெரம்பலூரில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள், பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு நாளை மறுநாள் (ஜன. 10) மாபெரும் விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கல்வி அலுவலர் மாரி மீனாளும், அன்றைய தினமே நடக்கும் ஷாந்தார் மெகா புத்தக கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. மதிவாணன் தொடங்கி வைக்க உள்ளனர்.

விழிப்புணர்வு பேரணி பழைய பேருந்துநிலைத்திலிருந்து புதிய பேருந்துநிலையம் வரை பள்ளி மாணக்கர்களை கொண்டு நடைபெற உள்ளது. பல்வேறு பதிப்பகங்களிருந்து வரவழைக்கப்பட்ட லட்ச்சகணக்காண புத்தகங்களை கொண்ட ஷாந்தர் மெகா புத்தக கண்காட்சி கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜனவரி 10,11 மற்றும் 12 ஆகிய 3 தினங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், புதிர் புத்தகங்கள், போட்டித் தேர்வில் பங்குபெறும் மாணக்கார்களுக்கான புத்தகங்கள், தலைவர்களின் சுயசரிதை புத்தககங்கள், தன்னம்பிக்கை புத்தககங்கள் மற்றும் யோகா புத்தககங்கள் இடம்பெற உள்ளன.

புத்தகக் கண்காட்சியை வரவேற்க்கும் நோக்கத்தோடு, இருமாதங்களுக்கு முன்பே அனைவருக்கம் உண்டியல் வழங்கப்பட்டது. உண்டியலில் சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு புத்தகத்திருவிழாவில் புத்தகங்கள் வாங்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தக பூங்கொத்து அமையவேண்டும் என்பதே பேரணி மற்றும் புத்தக கண்காட்சியின் நோக்கம்.

பார்வையாளர்களின் கண்களுக்கு மட்டுமல்ல அறிவிற்கும் விருந்தளிக்கும் வகையில் புத்தக கண்காட்சியில் பல்வேறு புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பேரணி மற்றும் புத்தக கண்காட்சிக்காண அனைத்து விதமான ஏற்பாட்டினையும் தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், முதல்வர் ஆர். அங்கயற்கண்ணி, துணை முதல்வர் எ. அகஸ்டின் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் திறம்பட செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!