Awareness rally for World AIDS Day in Namakkal

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அனைவரும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் துவங்கி மணிக்கூண்டு, திருச்சிரோடு, மோகனுடர் ரோடு வழியாக மீண்டும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

இப்பேரணியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் (பொ) திருநாவுக்கரசு, காசநோய் திட்ட துணை இயக்குனர் கணபதி, உதவி இயக்குநர் (சுகாதாரம்) நக்கீரன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள், டிரைவர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பங்கேற்று உணவு உட்கொண்டார். இதில் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!