Awareness rally in Namakkal on National Voters Day

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து விழிப்புணர்வ பேரணியை மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் சப் கலெக்டர் கிராந்திகுமார்பதி, தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) பால் பிரின்சி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் துவங்கிய பேரணி, மெயின் ரோடு, திருச்சி ரோடு, டாக்டர் சங்கரன் ரோடு வழியாக மீண்டும் அரசு ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.