Awareness rally on behalf of Pollachi incident by Orathanadu womens College of Bdu
பொள்ளாச்சி சம்பவம் குறித்து, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் “பொள்ளாச்சி சம்பவம் குறித்த விழிப்புணர்வு பேரணி” நேற்று நடைபெற்றது.
மாணவிகளின் பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி ஒரத்தநாடு அண்ணாசிலை வரை மாணவிகளால் நடத்தப்பட்டது.
மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பெண்களின் பாதுகாப்பு பற்றி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பேரணியின் போது பொதுமக்களுக்கு பெண்களின் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இப்பிரச்சாரத்தில் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.