Bajaj Chetak is coming back as an electric scooter: launch event tomorrow in Perambalur!
தற்போது உலகம் முழுவதும் பெட்ரோலுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், பைக்குகள், கார்கள் அதிக அளவில் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு விற்பனைக்கு வருகின்றன.
அதில், பழமையான பஜாஜ் கம்பனியும், தனது பங்கிற்கு சேட்டக் பிரிமியம், சேட்டக் அர்பன் என 2 வகையான புதிய இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாள் வரை பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் சோதனை ஓட்டம் பெற்ற பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்கள் பழைய ஸ்கூட்டர்களை நினைவுப்படுத்தும் வகையில், அதே சேட்டாக் பெயரில் மெட்டல் பாடியில் உருவாக்கி உள்ளது. பெரம்பலூரில் லிங்கம் பஜாஜ் சார்பில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு என தனியாக அமைக்கப்பட்ட ஷோரூமில் நாளை காலை 10 மணி அளவில் அறிமுக விழா நடக்கிறது.
ரோட்டரி இன்டர்நேசனல் டிஸ்டிரிக்ட் கவர்னர் ஜெ. கார்த்திக் பஜாஜ் சேட்டாக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைக்கிறார். ராஜென் அன்ட் கோ சி. மதன்ராஜ் முதல் வாகன விற்பனையை தொடங்கி வைக்கிறார். பெரம்பலூர் செந்தூர் மெடிக்கல் டி.சுகுமார் வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார்.
நியூ தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஆர்.பால்ராஜ், மெர்குரி பிரிண்டர்ஸ் கே.பாலமுருகன், கல்யாணி செட்டிநாடு மெஸ் எஸ். கார்த்திக், அமுதா ஸ்டோர்ஸ் தி.வினோத், ஏ-ஒன் டிவி ஆ. துரைசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளனர். அருள் ஸ்டோர்ஸ் டி.லிங்கராஜ், எஸ்.எல். அருள்மொழி, ஆகியோர் வரவேற்று வாழ்த்துகளை தெரிவிக்கவும் உள்ளனர்.
மேலும், லிங்கம் பஜாஜ் மேலாண் இயக்குனர் எல். வரதராஜன் வாடிக்கையாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.