BamBiNO Sonpapti is a huge hit among the people of Perambalur! 200 g Rs. 45
பெரம்பலூர் மாவட்ட மக்கள் எப்போதுமே நல்ல பொருட்களுக்கு ஆதரவை கொடுக்க தயங்குவதில்லை. அந்த வகையில், குறிப்பாக, பெரம்பலூரை சேர்ந்த உள்ளூர் ஸ்வீட்ஸ் – ஸ்நாக்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் கால் கிலோ சோன் பப்டி சுமார் ரூ.110 ல் இருந்து 130 வரை விற்பனை செய்து வரும் வேளையில், பிரபல சேமியா உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான BAMBINO 200 கிராம் சோன் பப்டியை, சூப்பர் மார்க்கட் கடைகளில் MRP ரூ. 90 கொண்ட பாக்கட்டை 50 சதவீத ஆஃபரில் ரூ. 45 க்கு தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.
இந்த விற்பனை ஆஃபர் , பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், சாக்லெட், பைனாப்பிள், ஆரஞ்ச், பட்டர் ஸ்காட்ச் போன்ற பிளேவர்களும் இருப்பதால், குழந்தைகளுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
அதே போன்று மிக்சர், முறுக்கு, மிளகு தட்டடை, மெட்ராஸ் மிக்சர், பூண்டு மிக்சர், முறுக்கு போன்றவற்றையும் தெலுங்கான மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, சூப்பர் மார்க்கட்களில் 200 கிராம் பாக்கட்டுகள் ரூ. 45 முதல் ரூ.54 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 225 முதல் ரூ. 250 வரை வருகிறது. இதற்கு ஏஜன்சி கமிசன், கடைகாரர்களுக்கு விற்பனை கமிசனும் கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உள்ளூர் ஸ்வீட்ஸ் – ஸ்நாக்ஸ் நிறுவனங்கள் 2 மடங்கு வரை கூடுதல் விலைக்கு விற்பது, வாடிக்கையாளர்களை ஆசையை தூண்டி ஏமாற்றும் செயலாக உள்ளது.
இந்த விலை மற்றும் தரத்தால் வித்தியாசயத்தை உணர்ந்த பொதுமக்கள் பெரும்பாலான உள்ளூர் நிறுவனங்களை புறக்கணித்து விட்டு, நியாமான விலைக்கு கொடுக்கும் வெளிமாநில நிறுவன பொருட்களுக்கு தொடர் நல்ஆதரவு கொடுக்கக தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டை A2B க்கு, அடுத்து, bambino நிறுவனமும் பொதுமக்களிடையே ஸ்நாக்ஸ் வகைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், ஏஜன்சி எடுத்தவர்கள், சூப்பர் மார்க்கட் விற்பனையார்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.