Bank’s Customers Meeting Camp in Perambalur : 468 beneficiaries 14.58 crores Loan Provided

பெரம்பலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் நபார்டு இணைந்து நடத்திய அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில்
468 பயனாளிகளுக்கு ரூ. 14.58 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

முகாமிற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில், அனைத்து வங்கி கிளைகளும் விவசாய சார்ந்த கடன்களான பயிர்கடன், கறவை மாடு கடன்களுக்கு முன்னுரிமை அளித்து கடனுதவி வழங்குகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து விவசாய கடன், கல்வி கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்கள் என பல்வேறு வகையில் அனைத்து வங்கிகள் மூலம் 468 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 58 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் அங்கடா ரத்னா பாத்ரோ, கனரா வங்கி பொதுமேலாளர் சினேகலதா ஜான்சன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி இணை பொதுமேலாளர் வெஜெ ரமேஷ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் அம்பிகாபதி,நபார்டு வங்கி மேலாளர் நவின்குமார், கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அகல்யா ஆகியோர் வங்கிகள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் மற்றும் வங்கி சேவைகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெறும் பல்வேறு இலவச தொழில் பயிற்சிகள் குறித்து விளக்கினர்.

இதில் அனைத்து வங்கிகள் சார்பில் ஸ்டால்கள் அமைத்து வங்கியின் பணிகள், சேவைகள்,கடனுதவிகள் குறித்து வங்கி அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். இம்முகாமில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஐஓபி தலைமை மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார். முடிவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள் நன்றி கூறினார். இந்த வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்
இன்றும் நடைபெறுகிறது.

படவிளக்கம் :

பெரம்பலூரில் நடந்த அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் கலெக்டர் சாந்தா மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்குகிறார்.அருகில்
ஐஓபி பொதுமேலாளர் அங்கடா ரத்னா பாத்ரோ உள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!