Banks do not have enough money! clash increase the central government’s announcement of flying in the air

500-currency-new

பெரம்பலூர் மாவட்டத்தில் பணம் எடுக்க வங்கிகள் முன்பு திரண்ட கூட்டத்தால் தள்ளு முள்ளு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து போலீசார் வந்து கூட்டத்தை
கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் கடந்த மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து தாலுகா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான வங்கிகளின் ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டது. வங்கிகளிலும் தொடர்ந்து பல நாட்களாக பணம்
வழங்காமல் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அலைகழிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து வங்கிகளில் மட்டும் ஒரு நபருக்கு ரூ.2000 மட்டும் வழங்கப்பட்டது.

இந்த சொர்ப்ப தொகையை கொண்டு பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை கூட நிவர்த்தி செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் 8 ம் தேதி மூடப்பட்ட வங்கிகளின் ஏடிஎம்கள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே கொடுக்கப்படும் ரூ.2000 எடுக்க பொதுமக்கள் ஒவ்வொரு
வங்கிகளின் முன்பும் நீண்ட வரிசைகளில் காத்து கிடக்கின்றனர். பல நேரங்களில் வரிசையில் நிற்ப்பவர்களுக்கு கூட பணம் வழங்காமல் பணம் தீர்ந்து விட்டது என திருப்பி அனுப்புகின்றனர்.இதனால் வங்கி அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பல வங்களில்
வங்கியின் முன்பு பணம் எடுப்பதற்காக வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடியது. இதனால் வங்கிக்குள் செல்வதற்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதனை தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பணம் எடுக்க வந்த பொதுமக்களை ஒழுங்குப்படித்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் கூறும் போது, இந்த வங்கியில் கடந்த மாதம் 8 ம் தேதியில் இருந்தே இதே நிலைதான்.இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.2000 மட்டுமே வழங்குகின்றனர்.வங்கியில் சென்று வித்ராயில் மூலம் பணம் எடுத்தால் அதிக பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி
அறிவித்திருந்தது. ஆனால் இந்த வங்கியில் அவ்வாறு கூடுதலாக பணம் வழங்கப்படுவதில்லை. எங்கள் பணத்தை எங்கள் வங்கி கணக்கில் இருந்து எப்பதற்கே முடியவில்லை,இதனால் அத்தியாவசிய செலவுகள் எதுவும் பார்க்கமுடியாமல் வங்கியில் பணம் இருந்தும் திண்டாடுகிறோம்.ஆனால் அதே நேரம்
பெரம்பலூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், பூலாம்பாடி,வி.களத்தூர் ,வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வேலை பார்க்கும் ஒரு சில அலுவலர்கள் மாலை நேரங்களில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தனியாக வரவழைத்து கூடுதலாக பணத்தை வழங்கி வருகின்றனர், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வடமாநிலங்களை போல வங்கிகளை பொதுமக்கள் அடித்து நொறுக்கும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே நாளுக்கு நாள் பொதுமக்களின் கோபம் வங்கிகள் நிர்வாகத்தின் மீது அதிகரித்து வரும் நிலையில், இந்த பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும், வங்கிகளில் அதிகப்படியான பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

மேலும், வங்கி ஊழியர்கள், அடுத்தவர்கள் பெயரில் முறைகேடாக செலுத்தி, பொய் கையெழுத்திட்டு கருப்பு பண கும்பலுக்கு உதவி வருவதாகவும் தெரிய வருகிறது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!