Battacharyar, who served the Namakkal Anjaneyar, fell on a height of 8 feet and suffered head injury.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு இன்றுமாலை சாத்தப்பட்ட போது எட்டு அடி உயரத்தில் இருந்து பட்டாச்சாரியார் ஒருவர் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேச பட்டாச்சாரியார் (வயது 53). இவர் தனியார் நிறுவனத்தில், உதவி பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

விடுமுறை நாளான இன்று நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு பணிவிடை செய்ய வந்தார். அப்போது எட்டு அடி உயரத்தில் நின்று ஆஞ்சநேயருக்கு மாலை சாத்திகொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக பலகை வழுக்கி விட்டதால் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆஞ்சநேயருக்கு பணிவடை செய்து கொண்டிருந்த போது பட்டாச்சாரியார் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததை கண்ட கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!