BDO who took the Perambalur 100 days project Worker site manager in charge of the tour!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள பொறுப்பாளர்களை அரசு அதிகாரி ஒருவர் ,இருமுறை சுற்றுலா அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணியாளர்களில் ஒருவர் பணி தள பொறுப்பாளராக தேர்வு செய்யப்படுவார். அதில், விதவை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு, நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பொறுப்பு ஒருவருக்கு 100 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். 100 நாட்களுக்கு பிறகு வேறு பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் அந்த பொறுப்பு மாற்றி கொடுக்கப்படும். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், தொடர்ந்து ஒருவரே பல ஆண்டுகளாக பணிதள பொறுப்பபாளராக பணியாற்றி வருகின்றனர்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பணிதள பொறுப்பாளர்களை பி.டி.ஓ., ஒருவர் லாடபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் விதிமுறைகளை கடைபிடிக்காமல், சட்டத்திற்கு புறம்பாக 100 வேலை திட்ட பணியாளர்களின் பொறுப்பாளர்களை சுற்றுலா அழைத்து சென்ற சம்பவம், பெரம்பலூர் பகுதியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பி.டி.ஓ ஏற்கனவே 100 வேலை திட்ட பணியாளர்களை ஆய்விற்கு சேன்ற போது, கீழக்கரை கிராமத்தில் சிறுநீர், கழிக்க சென்றவர்களுக்கு ஆப்சென்ட் போட்டார். இதே போன்று பல கிராம மக்களுக்கும் ஆப்சென்ட் போட்டுள்ளார். இதில் கடும் மனஉளைச்சல் அடைந்த கீழக்கரை பணியாளர்கள், அங்கு அருகே இருந்து காட்டு மாரியம்மன் கோவிலில் மண் அள்ளிவிட்டனர். இதே போன்று பலரின் ஏழை அப்பாவிகளின் வயிற்றில் அடித்து தன்னை நேர்மையானவராக நிரூப்பித்து கொண்டார்.
இந்நிலையில் வேப்பூர் ஒன்றியத்தில் பணிபுரிந்த போது துங்கபுரத்தை சேர்ந்த பெண் குன்னம் காவல் நிலையத்தில் இந்த அதிகாரி மீது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கொடுத்த புகாரில் சமரசம் பேசி 4 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து, தப்பி வந்த அவர் தற்போது பணித்தள பொறுப்பாளர்களை சுற்றுலா அழைத்து சென்ற சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து முக்கிய அதிகாரி ஒருவரிடம் பேசியபோது: தனது பெயரை வெளியிட வேண்டாம் என தெரிவித்துக் கொண்ட அவர் கூறியதாவது: 100 வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களை 100 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கவேண்டும். அது அரசியல் பிரசரால் முடியவில்லை. மேலும், சுற்றுலா அழைத்து செல்வது சட்டப்படி அரசு ஆணை இல்லை என தெரிவித்தார். மேலும், குறித்து தகவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பி.டி.ஓ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.