Before the woman against jest: 5 persons sickle cut: case field aganist 15 persons
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் எஸ்.பியிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதவது:
நேற்றிரவு அம்பேத்தகர் காலனியில் வசிக்கும் செல்வன், இவரது மனைவி புஷ்பராணி, மற்றும் இவர்களது மகன்கள் விக்னேஷ், சந்தோஷ்குமார், செங்குட்டுவனின் மனைவி அனிதா ஆகியோரை அதே ஊரை சேர்ந்த மாற்று சமூகத்தினர் அரிவாளால் வெட்டியதாகவும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அரிவாளால் வெட்டிய சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், புகார் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. சோனல் சந்திரா இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இரு தரப்பிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கி கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்றிரவு நடந்த தாக்குதல் தொடர்பாக 10 பேர் மீது சாதி பெயர் சொல்லி திட்டியதாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், மற்றொரு தரப்பில் 5 பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.