Being in Beer Bottle in hand does not drink: Actor Vishal, answer to Ramadoss
விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.
நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.