Best Entrepreneurship Award for Micro, Small and Medium Enterprises for 2023-2024; Perambalur Collector Notification!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு 2023-2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில் முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழக அரசு விருது வழங்க உள்ளது.

தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் 50 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

உள்நாடு மற்றும் உலக சந்தைகளில் போட்டி தன்மையுடன் இருக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான நடவடிக்கைகள் வாயிலாக முன்னேற்றம் கண்டுள்ள தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விருதுகள் வழங்குகிறது.

அதன்படி, 2023-24ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட தொழில் முனைவோர்களுக்கு, மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றமதிக்கான விருது, மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது என மொத்தம் ஆறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது.

விருது பெறும் விரும்பும் தொழில் நிறுவனங்கள் பேம்.டி.என். (https://awards.fametn.com) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இறுதி நாள் 20.05.2024 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர்-621212 அவர்களை நேரிலும், 89255 33976, 89255 33978 என்ற தொலைபேசியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!