Bharat Bandh in Perambalur; Half an hour of traffic jams!
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும், வேலைவாய்ப்பை பெருகிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் “பாரத் பந்த்” என ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் உள்பட 300க்கும் மேற்ப்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.