Bharatam, Village Dance, Vocal, Painting Competitions for Students of Perambalur District: Collector Information!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களாக சனிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரையிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

பரத நாட்டியம் (செவ்வியல் கலை) போட்டியில் கலந்து கொள்பவர்கள் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை பக்கவாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை) போட்டியில் கலந்து கொள்பவர்கள் தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவற்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.

குரலிசை போட்டியில் கலந்து கொள்பவர்கள் கர்நாடக இசை தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை திரையிசைப் பாடல்கள், குழப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக் கூடாது.

ஓவியப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 40×30 செ.மீ அளவுள்ள ஓவியக் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில் கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்ட் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட அரசு இசைப்பள்ளி, மதன கோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற இடத்தில் 24.12.2022 அன்று காலை 9.00 மணிக்கு வருகை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!