Bharathidasan University Arts Festival; Perambalur Rover College won the overall win.

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டிகளில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி கோப்பைகளை வென்றது.

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலை விழா-2019 நடந்து . அதில் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு,தனியார், மற்றும் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், 30 க்கும் மேற்பட்ட பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளில் கலந்த கொண்டன. நடந்த அனைத்துப் போட்டிகளிலும் ரோவர் கல்லூரி மாணவர்கள் 51 பேர் கலந்துகொண்டு, பல்வேறு பரிசுகளை தட்டி வந்ததுடன் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையையும் வென்றனர்.

வென்ற பரிசு விவரங்கள்

ரோவர் கல்லூரி 32 வகையான போட்டிகளில் பங்குபெற்று 20 போட்டிகளில் வெற்றிபெற்று பல்கலைக்கழக அளவில் இரண்டாவது முறையாக முதலிடம் பெற்று வரலாறு படைத்தது .இந்தியக் குழுப்பாடல் ,மேற்கிந்திய குழுப்பாடல் ,கிராமியக்குழு இசை , பேச்சுப்போட்டி(தமிழ்), தமிழ்க் கவிதைப் போட்டி , ஓரங்க நாடகம், குறுநாடகம், குறும்படம் , பலகுரல், தனி நபர் நடிப்பு, சுவரொட்டி தயாரித்தல், களப் புகைப்படம், துண்டு பொருட்களாலான ஓவியம் படைத்தல் ஆகியவற்றில் முதல் பரிசுகளும், செவ்வியல் கருவி இசை , மேற்கத்திய தனிப்பாடல்,தெருக்கூத்து,கோலப்போட்டி ஆகிய போட்டிகளில் இரண்டாமிடமும் ,கிராமிய நடனம்,மௌன நாடகம், ஆகிய போட்டிகளில் மூன்றாமிடமும் ,கிராமியத் தனிப்பாடலில் ஐந்தாம் இடமும் வென்று தனித்திறமைகளை நிரூபித்தது.

வென்ற கோப்பை விவரங்கள்

மாணவர்கள் பல்வேறு பரிசுகள் மட்டுமில்லாமல் பல்வேறு கோப்பைகளையும் வென்று குவித்தனர். சிறந்த குறுநாடகத்திற்கான கோப்பை , சிறந்த ஓரங்க நாடகத்திற்கான கோப்பை , சிறந்த குறும்படத்திற்கான கோப்பை,சிறந்த தமிழ்ப் பேச்சிற்கான கோப்பை,சிறந்த நுண்கலைக்கான கோப்பை ,சிறந்த இசைக்கான ஒட்டுமொத்த வெற்றிக்கோப்பை, ஒட்டுமொத்த நாடகதிற்கானச் சிறப்புகோப்பை ,சிறந்த கவிதைக்கான கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்தது.குறு நாடகம் மற்றும் ஓரங்க நாடகத்திற்கான சிறந்த பயிற்சியாளர் கோப்பையை திரு.ரெனால்டு அவர்களும்,சிறந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளருக்கானக் கோப்பையை முனைவர் க.மருததுரை அவர்களும் பெற்றனர்.மேலும்,சிறந்த சுயநிதி கல்லூரிக்கான கோப்பையை தொடர்ந்து மூன்றாவது முறையாக பெற்றதோடு,பல்கலைக்கழக அளவில் ஒட்டுமொத்த சுழற்கோப்பையை வென்றும் ரோவர் கல்லூரி வரலாறு படைத்தது

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவங்களின் மேலாண் தலைவர் டாக்டர். கி.வரதராஜன் , துணை மேலாண் தலைவர் வ.ஜான் அசோக் வரதராஜன் மற்றும் ரோவர் நிறுவன உயர் கல்வித்துறை இயக்குனர் எஸ்.பாலமுருகன் மற்றும் கல்லூரி முதல்வர் செ.விஜயகுமார், துணை முதல்வர் மஹேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணக்கர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!