Bhoomi Pooja for free toilet for Govt School by All India Builders Association, Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான இலவச கழிவறைகள் 12 மற்றும் அதற்குண்டான செப்டிக் டேங்க் ஆகியவற்றை அகில இந்திய கட்டுநர் சங்கம், பெரம்பலூர் மையம் சார்பில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் இலவசமாக கட்டித்தர பூமி பூஜை நடந்தது.
பெரம்பலூர் கட்டுநர் மைய தலைவர் தர்மராஜ், செயலாளர் ஜோதிவேல், பொருளாளர் ரவிக்குமார், மாநிலத் திறன் மேம்பாட்டு குழு தலைவர் ராஜாராம், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அகில இந்திய கட்டுநர் சங் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.