Bhumi Pooja of water tank worth Rs 7 lakh; Perambalur MP Parivendar inaugurated!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே இரூர் கிராமத்தில் பெரம்பலூர் எம்.பி நிதியிலிருந்து ரூ 7 லட்சம் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
மேலும், இருர் கிராமத்தில் சாக்கடை வசதி செய்து கொடுக்கவும், சாலைகள், அமைப்பதற்கும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனுவினை இரூர் ஊராட்சி தலைவர் காந்திமதி, எம்.பி பாரிவேந்தரிடம் கொடுத்தார்.
ஐஜேகே பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரகுபதி, திருச்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், ஐ ஜே கே ஆலத்தூர் ஒன்றிய தலைவர் காமராஜ், உள்ளிட்ட ஐ ஜே கே நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.