Bicycle competitions for school boys and girls on the occasion of Anna’s birthday: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக அருகே, மிதிவண்டி போட்டிகள் மாணவ – மாணவியர்களுக்கு நாளை காலை 07.45 மணிக்கு நடபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா 15.09.2022 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

விளம்பரம்:

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்களது சொந்த மிதி வண்டிகளை கொண்டு வர வேண்டும். மாணவ, மாணவியர்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். வீரர், வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதமும், நான்கு முதல் பத்தாம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம்ம் பரிசு தொகையினை காசோலையாக 15.09.2022 அன்று பரிசளிப்பு விழாவின் போது வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும்.

எனவே, சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களை பள்ளி வயது சான்றிதழுடன் 08.09.2022 அன்று காலை 07.45 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!