Bikes face-to-face collision; Student killed with boyfriend; 3 people injured!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் ரிங்ரோடு அருகே ஆத்தூர் சாலையில், கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்த முயன்ற மோட்டார் சைக்கிள் மீது, எதிரே காதலர்கள் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காதலி பலியானர். இதில் காதலன் உள்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் வினோத் (22), பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வசிஷ்டபுரத்தை சேர்ந்த அறிவழகன் மகள் சுஷ்மிதா (20). இவர் பெரம்பலூரில் உள்ள சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ மூன்றாம் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வினோத்தும், சுஷ்மிதாவும், பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் ஆத்தூர் சாலையில் பெரம்பலூர் நோக்கி, கோனேரிப்பாளையம் ரிங்ரோடு, வந்து கொண்டிருந்தனர். அப்போது காதலர்களுக்கு எதிராக வந்த கரும்பு டிராக்டரை, அன்னமங்கலம் – பூம்புகாரை சேர்ந்த சோமசுந்தரம் (52), தனது மோட்டார்சைக்கிளில், அன்னக்கிளி என்பவரை ஏற்றிக் கொண்டு முன்னே சென்ற கரும்பு டிராக்டரின் பின்னால் இருந்து முந்தி சென்றார். அப்போது, காதலர்கள் வந்த மோட்டார்சைக்கிளும், சோமசுந்தரம் வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் கரும்பு பெட்டியின் மீது, காதலி சுஷ்மிதாவின் தலை மோதி சம்பவ இடத்திலேயே காதலன் முன்பு துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கிய காயமடைந்த காதலன் வினோத், சோமசுந்தரம், அன்னக்கிளை ஆகிய மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுஷ்மிதாவின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு டிராக்டர் நிறுத்தாமல் சென்று விட்டதால் போலீசார் கரும்பு டிராக்டர் டிரைவரை கோனேரிபாளையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!