BJP Annamalai makes false allegations against DMK ministers for political gains; Minister Sivashankar Interview!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக திமுக அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களாக அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட என் மன் என் மக்கள் பிரச்சார பயணத்தின்போது போக்குவரத்து துறையில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேற்று பெரம்பலூரில் பதில் அளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை நாடே அறியும். அவர் பேசுவதெல்லாம் விதண்டாவாதம் தான். 2 லட்சம் புத்தகம் படித்தேன் என்று கூறுவார் ஒரு லட்சம் வழக்கு பதிவு செய்தேன் என்பார் எதுவுமே நடக்கவில்லை.

சாத்தியம் இல்லாத விஷயங்களை பேசி வருகிறார். இதே போல கவர்னரிடம் ஆதாரங்களை பெட்டியில் கொடுத்தேன் என்பார். அது வெறும் டிரங் பெட்டிதான்.

அதேபோல தான் யார் மீதாவது குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

போக்குவரத்துறையே நழிவடைந்திருந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு தான் அது சீரடைந்து வருகின்றது‌. அரசியல் லாபத்திற்காக தேவையற்றவற்றை அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.

15 ஆண்டுகளை கடந்த1777 பேருந்துகள் இயக்குவதில் எழுந்துள்ள சிக்கல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு மத்திய அரசு 15 ஆண்டு கடந்த பேருந்துகளை இயக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்த ஆண்டு வரை இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காலத்தில் அரசு பேருந்துகள் இரண்டு ஆண்டுகள் இயக்கப்படாமல் உள்ளது அந்த காலத்தை சேர்த்துக் கொள்ள கூடாது என்றார். மற்ற மாநிலங்களை விட அதிக பேருந்துகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அதில் ஆயிரத்து 500 பேருந்துகளை நிறுத்தினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
பள்ளி மாணவ மாணவிகள் கிராம ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் இன்னும் ஓராண்டு காலத்திற்கு அந்த பேருந்துகள் இயக்கப்படும் 4000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு உண்டான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது புதிய பேருந்துகள் வந்த பிறகு அதிக அளவில் பழுதாகி உள்ள பழைய பேருந்துகள் ஒவ்வொன்றாக இயக்கப்படுவது நிறுத்தப்படும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்தினர் கூட நியமிக்கப்படாததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய ஓட்டுநர்கள் நடத்துனர்கள் நியமனம் விரைவில் நடத்தப்பட்டு நிலைமை சீரமைக்கப்படும் என்றார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!